இன்று தீர்ப்பு..! மோடி குடும்ப பெயர்... ராகுல்காந்திக்கு வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன.?

இந்த வழக்கில் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் ராகுல்காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட முடியும். அதுவே அவருக்கு எதிராக தீர்ப்பு வந்தால் வரும் 2023

Rahul Gandhi

மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற ராகுல் காந்தி, மேல்முறையியீடு செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடகாவில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. இதன்படி அவர் வகித்து வந்த கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் தனது தண்டனையை நிறுத்தி வைக்குமாறு மேல்முறையீடு செய்து இருந்தார் ராகுல் காந்தி. அந்த மனு மீதான விசாரணை கடந்த சில மாதங்கள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இருதரப்பு வாதங்களும் முடிந்து இன்று அதன் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த வழக்கில் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் ராகுல்காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட முடியும். அதுவே அவருக்கு எதிராக தீர்ப்பு வந்தால் வரும் 2023 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். இதனால் இந்த தீர்ப்பை இந்திய அரசியல் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கக்கூடிய தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.