தமிழகத்தில் நடைபெறும் ஏர் கலப்பை பேரணியில் ராகுல்காந்தி பங்கேற்பு

தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் ஏர் கலப்பை பேரணியில்  ராகுல் காந்தி பங்கேற்கிறார்.

தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் ஏர் கலப்பை பேரணியில்  ராகுல் காந்தி பங்கேற்கிறார்.

நாட்டின் வளர்ச்சி, விவசாயிகள் மேம்பாட்டுக்காகஏர்கலப்பை பேரணிகள்விரைவில் நடத்தப்படும்  என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி கூறியிருந்தார்.தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் ஏர் கலப்பை பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாகதமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,தமிழகம் முழுவதும் நடைபெறும் ஏர் கலப்பை ஊர்வலங்களின் இறுதியில் மாநில அளவில் நடைபெறும் விவசாயிகளின் பேரணியில் காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் பங்கேற்க இருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிற விவசாயிகள் பேரணி தமிழகத்தின் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிற வகையில் அமையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் எந்த தேதியில் ஏர் கலப்பை ஊர்வலம் தொடங்கும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

unknown node