10 வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2023:ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தொடர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
ஏற்கெனவே, அமளி காரணமாக மாநிலங்களவையும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றுடன் 10 வது நாளாக நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் மற்றும் அதானி குழும் விவகாரம் என அனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் மற்றும் திமுக எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் காங்கிரஸ் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.