ராகுல் காந்தி பதவிநீக்கம்; நாடாளுமன்றத்தில் கறுப்பு உடை போராட்டம்- காங்கிரஸ்.!

எம்.பி பதவியிருந்து ராகுல்காந்தி பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கறுப்பு உடை அணிந்து பங்கேற்க முடிவு.

எம்.பி பதவியிருந்து ராகுல்காந்தி பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கறுப்பு உடை அணிந்து பங்கேற்க முடிவு.

2019 குஜராத் பரப்புரையில் அவதூறு குற்றச்சாட்டில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு நாடுமுழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி க்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் இன்று கறுப்பு உடை அணிந்து பங்கேற்க முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதிநீக்கம் மற்றும் அதானி விவகாரம் குறித்து எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு உடை அணிந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் உறுப்பினர்களும் ஏற்கனவே இன்று சட்டப்பேரவையில் கறுப்பு ஆடையுடன் பங்கேற்க முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி பதவிநீக்கம்; நாடாளுமன்றத்தில் கறுப்பு உடை போராட்டம்- காங்கிரஸ்.!