தனது பாட்டி இந்திராகாந்தி போல குணம்படைத்த ஒரு பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள ஒற்றுமை யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வழிநெடுகிலும் காங்கிரஸ் கட்சியினர், முக்கிய பிரபலங்கள், கூட்டணி கட்சியினர் என பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்த நடைப்பயணத்தின் இடையே நடந்த நிகழ்வில் பேசுகையில், தனது திருமணம் பற்றி கூறியுள்ளார். அதில் அவரது பாட்டியான மறைந்த முன்னநாள் பிரதமர் இந்திராகாந்தி மேல் தான் காதலாம். அவர் தனது இரண்டாம் தாய் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்திராகாந்தி போல குணம்படைத்த ஒரு பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த பெண் எனது அம்மா சோனியா காந்தி மற்றும் பாட்டியின் குண நலன்களை பெற்றிருந்தால் நல்லது. எனவும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.