கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி; வீட்டில் ஒருவாரம் தனிமைப்படுத்திப் பணிகளை செயல்படுத்த முடிவு

Puducherry Chief Minister Rangasamy returning home after corona treatment; Decided to carry out isolation work at home for a week

கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பியுள்ளார்.

புதுவை முதல்வராக ரங்கசாமி கடந்த மே 7 ஆம் தேதியன்று பதவியேற்றார். இதனையடுத்து,முதல்வர் ரங்கசாமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால்,கடந்த 9 ஆம் தேதியன்று சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு பரிசோதனையில் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதனைத் தொடர்ந்து,முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில்,கொரோனா தொற்று குணமடைந்து முதல்வர் ரங்கசாமி கடந்த நேற்று புதுச்சேரியில் உள்ள தனது வீட்டிற்க்கு திரும்பியுள்ளார்.மேலும்,கொரோனா தொற்று சிகிச்சை எடுத்ததன் காரணமாக மருத்துவர்கள் அறிவுரைப்படி,முதல்வர் ரங்கசாமி தன்னை ஒருவாரம் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு,வீட்டில் இருந்தபடியே பணிகளை செய்ய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.