#Breaking:"நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் அவமதிக்கின்றன" – பிரதமர் மோடி ..!

Prime Minister Modi has said that the opposition is insulting the parliament.

நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் அவமதிக்கின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து பெகாசாஸ்,கறுப்பு பணம்,வேளாண் சட்டம்,பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி, அமளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி,இன்று 15 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் சென்றனர்.

இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடியும்,பாஜக எம்பிக்கள்,மூத்த தலைவர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.அப்போது பேசிய பிரதமர்:”மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து 10 நாட்களாக அவைகள் முடக்கப்பட்டுள்ளன.எதிர்க்கட்சிகள் தினமும் முழக்கங்களை எழுப்பி ,அவைகளை முடக்கி நாடாளுமன்றத்தை அவமதிக்கின்றன.”,என்று தெரிவித்துள்ளார்.