பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்து..! பிரக்ஞானந்தா நெகிழ்ச்சி ட்வீட்..!

உலக கோப்பை செஸ் தொடர் போட்டியானது அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு என்ற  நகரில் நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18

Prime Minister Modi

உலக கோப்பை செஸ் தொடர் போட்டியானது அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு என்ற  நகரில் நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, இறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.

உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சன், 2.5 – 1.5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று, 6 வது முறையாக உலகக்கோப்பை செஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த இறுதி போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை நேரில் அழைத்து பி பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமரை சந்தித்தது மிகவும் பெருமைக்குரிய தருணம் என பிரக்ஞானந்தா ட்வீட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

unknown node