பிரதமர் மோடி காணொலி வாயிலாக இங்கிலாந்தில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார்!

The G-7 summit is being held in the UK from June 11 to 13. Prime Minister Modi is participating in the conference via video.

இங்கிலாந்தில் ஜூன் 11 முதல் 13 ஆம் தேதி வரை ஜி-7 மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்கிறார்.

இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகள் அடங்கிய ஜி 7 அமைப்பின் மாநாடு இங்கிலாந்திலுள்ள கார்ன்வால் எனுமிடத்தில் ஜூன் 11 முதல் 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.  இந்த ஜி-7 மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனையடுத்து இங்கிலாந்தில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால் கொரோனா  பரவல் இன்னும் ஓயாத நிலையில், ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி நேரில் கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்து. இதனை அடுத்து இந்த மாநாட்டில் 12 மற்றும் 13 ஆகிய இரு அமர்வுகளில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்பார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.