ஏழை மாணவர்கள் நம்பியிருப்பது புறநகர் ரயில்களையே! அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! – கமலஹாசன்

Poor students rely on suburban trains. Kamal Haasan tweeted that the government should take immediate action.

ஏழை மாணவர்கள் நம்பியிருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமலஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமளியில் இருந்தது. இந்நிலையில் கடந்த சில காலங்களாக  பொது முடக்கத்தில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னையை பொறுத்தவரையில், குறைந்த அளவே புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு அந்த ரயிலில் பயணிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. இதுகுறித்து கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்வி சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பியிருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.