#BREAKING : ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது போலீசில் புகார்!

Reserve Bank employees who insulted the life of Tamils complained to the Commissioner of Police to take action.

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ரிசர்வ் வங்கி ஊழியர்கள் மேல் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்ட போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அலட்சியம் காட்டியுள்ளதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது.

இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசாணையை அவமதித்த சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் ஆன்லைன் மூலம் சென்னை மாநகர காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.