வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் ! அரசு குழுவுடன் பேச்சுவார்த்தை நடந்த பாமக முடிவு

PMK Says decision will be taken based on outcome of February 3 talks with a State Government

வன்னியர் இடஒதுக்கீடு  குறித்து பிப்ரவரி 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அரசின் அழைப்பு பாமக ஏற்றுள்ளது.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறி பா.ம.க சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்றது. ஆனால், ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் கோரிக்கையை அதிமுக அரசு இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே தான் இன்று பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ,வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு குழுவுடன் வரும் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை சென்னையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்றுதீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பேச்சுகளின் முடிவைப் பொறுத்து நிர்வாகக் குழுவை மீண்டும் கூட்டி அரசியல் முடிவை எடுப்பது என்றும் பாமக நிர்வாகக் குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.