இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். அனைத்து முன்னெச்சரிக்கை நெறிமுறைகளையும் பின்பற்றுங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node