அண்ணாமலை, மார்ச் 26இல் மோடி, அமித் ஷா வை சந்திக்க திட்டம்.!

அண்ணாமலை, வரும் மார்ச்-26 இல் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் நட்டா, அமித் ஷா வை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்.

அண்ணாமலை, வரும் மார்ச்-26 இல் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் நட்டா, அமித் ஷா வை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வரும் மார்ச் 26 ஆம் தேதி பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக உடனான மோதல்போக்கு தமிழகத்தில் நிலவிவரும் நிலையில் அண்ணாமலை வரும் மார்ச் 26இல் பாஜக தலைவர்களை சந்திக்க திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக-அதிமுக கூட்டணி நேர்ந்தால் தனது பதவியை விட்டு விலகுவதாக அண்ணாமலை கூறியதாக தகவல் வெளியான நிலையில் இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியிடவேண்டும் என அண்ணாமலை தனது கருத்தை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் மார்ச் 26 ஆம் தேதி டெல்லி சென்று, பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், சந்திப்பில் தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்தும் பேச உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலை, மார்ச் 26இல் மோடி, அமித் ஷா வை சந்திக்க திட்டம்.!