நடிகை விஜய லட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2011ம் ஆண்டு தன் மீது பதியப்பட்ட வழக்கை, ரத்து செய்ய வேண்டும் என சீமான் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் இந்த வழக்கை விசாரிக்க உள்ளார்.
புகாரை திரும்ப பெறுவதாக விஜய லட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் வழக்கை முடித்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பின் அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கை விசாரிப்பதாகவும், எனவே இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
