இன்று மக்கள் நீதி மையம் கட்சியின் இணையவழி கூட்டம் நடைபெறுகிறது!

The People's Justice Center has announced that the party's online discussion meeting will be held at 11 am today.

மக்கள் நீதி மையம் கட்சியின் இணையவழி கலந்துரையாடல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளதாக கட்சியின் பொது செயலாளர் அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி தோல்வியை சந்தித்த நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் தனித்தனியாக கமல்ஹாசன் அடிக்கடி  ஆலோசனை நடத்தி வருகிறார். ஏன் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் கலந்துரையாடி வருகிறார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு மக்கள் நீதி மையம் கட்சி இணைய வழி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் மவுரியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் மக்கள் நீதி மையத்தில் அடுத்தக்கட்ட பயணம், எப்படி கட்சியை வலுப்படுத்துவது? புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு ஆகியவை குறித்து கமல்ஹாசன் பேச இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் கட்சியினர் அனைவரும் இணைய வழியின் வாயிலாக பங்கேற்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் குறித்து கமலஹாசன் அறிவிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்று மக்கள் நீதி மையம் கட்சியின் இணையவழி கூட்டம் நடைபெறுகிறது!