பப்ஜி மதனிடம் பணத்தை இழந்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவித்துள்ளனர்.
பெண்களிடம் ஆபாசமாக பேசிய மற்றும் பணமோசடி புகாரில் தேடப்பட்டு வந்த யூ-டியூபர் மதன் நேற்று தருமபுரியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த போதுதனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஆபாசமாக பேசி ரூ.4 கோடி சம்பாதித்ததால் மதனின் வங்கிக்கணக்கையும் போலீசார் முடக்கினர். இதனைத் தொடர்ந்து, தருமபுரியில் இருந்து நேற்று இரவு மதனை தனிப்படை போலீசார் சென்னை அழைத்து வந்தனர். இந்நிலையில், பப்ஜி மதனிடம் பணத்தை இழந்து ஏமாந்தவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவித்துள்ளனர்.
மதன் பல பேரிடம் கூகுள் பே மூலமாக பணம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்களது பணம் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.