ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா கடந்து வந்த பாதையும்... தண்டனை விவரங்களும்...

ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட்டுள்ள்ளார். அது விரைவில் தமிழகத்தில் சட்டமாக்கப்பட உள்ளது. அதன் தன்னடனை விவரங்கள் கீழே

ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட்டுள்ள்ளார். அது விரைவில் தமிழகத்தில் சட்டமாக்கப்பட உள்ளது. அதன் தன்னடனை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மனித உயிர்களை பலி கொண்டு, தமிழக மக்கள் மத்தியில் தொடர் எதிர்ப்புகளை பெற்றுள்ள ஆன்லைன் சூதாட்டமானது தற்போது தமிழகத்தில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றே கூறலாம். ஒரு வழியாக நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கி விட்டார். விரைவில் அது சட்டமாக்கபடும் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பல உயிர்கள் காக்கப்பட்டுள்ளன என்றே கூறலாம்.

முதன்முறை :

unknown node

கடந்த வருடம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தமிழக அரசு ஒரு மனதாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது. கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக அந்த மசோதாவானது ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டது.

திருப்பி அனுப்பப்பட்ட மசோதா :

unknown node

நான்கு மாதங்களுக்குப் பிறகு கடந்த மாதம் 8ஆம் தேதியன்று, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை சட்ட மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் தமிழக மக்களிடத்திலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மீண்டும் மசோதா :

unknown node

திருப்பி அனுப்பியவுடன் அடுத்த நாள் அதாவது, பிப்ரவரி 9-ம் தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முடிவு செய்தனர். அதன்படி கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டம் தலை மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்து அடுத்த நாளான 25ஆம் தேதியே ஆளுநர் மாளிகைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.

ஆளுநர் பேச்சு :

unknown node

இதற்கிடையில் ஆளுநர் மாளிகையில் குரூப் 1 மாணவர்களிடையே பேசிய ஆளுநர் ரவி, ஒரு மசோதா திருப்பி அனுப்பப்படாமல் வெகு நாட்களாக கிடப்பில் இருந்தால் அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என கூறி தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.

ஆளுநருக்கு எதிர்ப்பு :

unknown node

ஆளுநரின் பேச்சுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்தனர். மேலும், நேற்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் செயல்பாடுகள் குறித்து ஆளுநருக்கு எதிராக தீர்மானத்தையும் நிறைவேற்றினர்.

ஆளுநர் ஒப்புதல் :

unknown node

இந்நிலையில் தான் நேற்று மாலை ஆன்லைன் தடை சட்டம் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு அந்த சட்ட மசோதாவானது அனுப்பப்பட்டுள்ளது. இதன் பிறகு முறையான நடவடிக்கைகள் மேற்கொண்டு அரசிதழில் சட்டம் வெளியிடப்படும். அரசிதழில் சட்டமாக்கப்பட்ட பிறகு அந்த சட்டமானது தமிழகத்தில் அமல்படுத்தப்படும்.

தண்டனை விவரம் :

ஆன்லைன் தடை சட்டத்தை மீறி விளையாடினால், அது குறித்த தண்டனை விவரங்களை இங்கே காணலாம்…

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை விளையாட்டினால் விளையாடுபவருக்கும் முதல் முறை மூன்று மாதங்கள் சிறைத்தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். அதேபோல அதற்கு விளம்பரம் செய்தால் ஓராண்டு சிறையும் 5 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மீண்டும் விளம்பரம் செய்தால், ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 10 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

unknown node

சூதாட்ட நிறுவனங்களளுக்கு…

அதேபோல, ஆன்லைன் சூதாட்டம் நிறுவனங்கள் தடையை மீறி செயல்பட்டால் மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 10 லட்ச ரூபாய் அபராதம் என இரண்டும் விதிக்கப்படும். அதே தவறை மீண்டும் அவர்கள் செய்தால் அவர்களுக்கு ஐந்தாண்டுகள் சிறை  தண்டனையும் 20 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தண்டனை விவரங்களும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.