மீரட்டில் இருந்து டெல்லிக்கு சென்ற அசாதுதீன் ஒவைசியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் ஹபூரில் அசாதுதீன் ஒவைசியின் கார் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஒவைசி ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
ஒவைசி ட்விட்டரில், “சில நேரத்திற்கு முன்பு டோல்கேட்டில் எனது கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 4 ரவுண்டுகள் சுடப்பட்டன. 3-4 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஓடிப்போய் விட்டனர். என் கார் பஞ்சர் ஆனது, ஆனால் நான் வேறொரு காரில் இறங்கி கிளம்பினேன். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதில், குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
unknown node