திமுக அரசின் இம்மாதிரி மிரட்டல்களை கண்டு அஞ்சுவதில்லை எங்கள் தொண்டர் கூட்டம் – வானதி சீனிவாசன்

திமுக அரசின் இம்மாதிரி மிரட்டல்களை கண்டு அஞ்சுவதில்லை எங்கள் தொண்டர் கூட்டம் என வானதி சீனிவாசன்  ட்வீட்.

திமுக அரசின் இம்மாதிரி மிரட்டல்களை கண்டு அஞ்சுவதில்லை எங்கள் தொண்டர் கூட்டம் என வானதி சீனிவாசன்  ட்வீட்.

திமுக எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதால் கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளனர்.

கோவையில் பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர். இவரது கைது குறித்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், வானதி சீனிவாசன் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கோவை மாநகர் மாவட்டதலைவரை தமிழக காவல்துறைகைது செய்திருப்பதும், கைது செய்யப்பட்ட விதமும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக அரசின் இம்மாதிரி மிரட்டல்களை கண்டு அஞ்சுவதில்லை எங்கள் தொண்டர் கூட்டம் . சட்டப்படியாக இதை சந்திப்போம்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node