ஈரோட்டில் இபிஎஸ் தரப்பில் அதிமுக கட்சி சார்பாக களமிறங்கிய வேட்பளர் தென்னரசு டெபாசிட் வாங்க வேண்டும். இல்லை என்றால், அதிமுக தலைமை அலுவலக சாவியை ஓபிஎஸ்- இடம் ஒப்படைத்து விடுங்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேசியுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் எல்லாம் முடிந்து நாளை மறுநாள் இறுதி வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளது.இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற நீண்ட போராட்டங்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அறிவித்த முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிட உள்ளார் என அதிகாரபூர்வமாக தெரிந்துவிட்டது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் போட்டியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துவிட்டது. இந்த விவகாரம் குறித்து ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில், ஈரோட்டில் இபிஎஸ் தரப்பில் அதிமுக கட்சி சார்பாக களமிறங்கிய வேட்பளர் தென்னரசு டெபாசிட் வாங்க வேண்டும். இல்லை என்றால், அதிமுக தலைமை அலுவலக சாவி உட்பட அனைத்தையும் ஓ.பன்னீர்செல்வத்திடம் எடப்பாடி பழனிசாமி ஒப்படைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், 46,000 கோடி ரூபாய் ஊழல் பற்றியும் தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாகவும் ஈரோட்டில் நான் பிரசாரம் செய்வேன் எனவும் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.