ஜனநாயகத்திற்கு ஆபத்து.! டெல்லியில் எதிர்க்கட்சியினர் தொடங்கிய பிரமாண்ட பேரணி.!  

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து எதிர்க்கட்சியினர் ஒன்றுகூடி பேரணி நடத்தினர். இதில் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்ற பதாகைகளை சுமந்து சென்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து எதிர்க்கட்சியினர் ஒன்றுகூடி பேரணி நடத்தினர். இதில் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்ற பதாகைகளை சுமந்து சென்றனர்.

நேற்று குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில், பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் கருத்தை தெரிவித்ததாக கூறி காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும், ஜாமீன் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

காங்கிரஸ் எதிர்ப்பு :

ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கியதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் முடிவு :

மேலும், இன்று டெல்லியில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றாக கலந்து ஆலோசித்தனர். பாஜக அரசு எதிர்க்கட்சியினர் மீது தொடர்ந்து சட்டவிரோதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றும், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றை தவறாக பயன்படுத்துகிறது என்றும் குடியரசு தலைவரிடம் மனு அளிக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்தனர்.

டெல்லியில் பேரணி :

இதனை தொடர்ந்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து குடியரசு தலைவர் மாளிகை நோக்கி எதிர்க்கட்சியினர் பேரணி நடத்த முயன்றனர். அப்போது அவர்கள் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்ற பதாகைகளை சுமந்து சென்றனர்.

அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விட கூடாது என முன்னெச்சரிக்கையாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், பேரணியானது நாடாளுமன்ற வளாகத்தில் சிறுது தூரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.