இபிஎஸ்-ஐ சந்தித்த நேரம் ஒதுக்கிய பிரதமர் மோடி.? அப்போ ஓபிஎஸ்.?

தமிழகம் வரவுள்ள பிரதமர் மோடியை சந்திக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம் வரவுள்ள பிரதமர் மோடியை சந்திக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை, சென்னை விமான நிலைய புதிய முனையம் துவக்கம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்கவும், முதுமலை யானைகள் முகாமிற்கு செல்வதற்காகவும் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார் .

இபிஎஸ் :

இதில் , தமிழகம் வரவுள்ள பிரதமர் மோடியை, பாஜகவின் மாநில கூட்டணி கட்சியான அதிமுக நிர்வாகிகள் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கேற்றாற் போல தற்போது பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் :

நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது பற்றிய உறுதியான தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில் பிரதமர் மோடியை சந்திக்க தனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.