ஒன்றாக முடிவு எடுத்தால் மட்டுமே,பிரித்தால் உயராது -கமல்ஹாசன் ட்வீட்

இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநர்கள் தேசியக் கொடியேற்றி ஏற்றி குடியரசு தினத்தை

இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

குடியரசு தினத்தை தினமும் கொண்டாடுங்கள் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநர்கள் தேசியக் கொடியேற்றி ஏற்றி குடியரசு தினத்தை கொண்டாடி வருகின்றனர்.டெல்லியில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார்.

unknown node

இந்நிலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,குடியரசு தினத்தை தினமும் கொண்டாடுங்கள். இந்த நாட்டின் மக்களாக நாம் அரசியல் அமைப்பில் அதிகாரம் பெற்றவர்கள். இந்த குடியரசை நம் அனைவருக்கும் வழங்கிய சுதந்திரம் குறித்து விழிப்புடன் இருப்பதாக உறுதி அளிப்போம். நாம் ஒன்றாக முடிவு எடுத்தால் மட்டுமே தேசத்தின் மகிமை உயரும்,பிரிந்தால் அல்ல என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.