ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைந்ததற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு.
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்து முதல்வர் திரு.மு.க. ஸ்டாலின்அவர்கள் உத்தரவிட்டிருப்பதை தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
unknown node