அமைச்சர் பொன்முடி வீட்டில் ஆன்லைன் பரிவர்த்தனை சோதனை.! அமலாக்கத்துறை தீவிரம்.!

அமைச்சர் பொன்முடி வீட்டில் பணப்பரிவர்த்தனை தொடர்பாக டிஜிட்டல் ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Minister Ponmudi

அமைச்சர் பொன்முடி வீட்டில் பணப்பரிவர்த்தனை தொடர்பாக டிஜிட்டல் ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகங்கள் , விழுப்புரத்தில் அவருக்கு சம்பந்தமான இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை குறித்த விவரங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

ஏற்கனவே அமலாக்கத்துறையினர் ஆவணங்களை சரிபார்த்து வருகையில், தற்போது அமைச்சர் பொன்முடி வங்கி கணக்குகள் மூலமாகவோ, அமைச்சர் பொன்முடி தொடர்புடையவர்கள் மூலமாகவே டிஜிட்டல் மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதா என்பதை ஆராய டிஜிட்டல் ஆவணங்களை சரிபார்க்கும் பொருளாதார தடவியல் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.