பெரியார் சிலை விவகாரம் ! ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது – ராகுல் காந்தி தமிழில் ட்வீட்

ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது என்று  ராகுல் காந்தி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது என்று  ராகுல் காந்தி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

கோவை மாவட்டம்  சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு  செய்ததால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பாரத்சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் .அவரது பதிவில்,எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

unknown node