"மிஸ்டர் மன்கிபாத் பிரதமரே..!உங்களால் என் கதையை முடித்து விட முடியும் என்று நினைத்தீர்களா?"- மம்தா ஆவேசம்..!

Mr. Mankibat Prime Minister ..! Did you think you could finish my story ?, It will never happen" - West Bengal Chief Minister Mamata Banerjee

மிஸ்டர் மன்கிபாத் பிரதமரே;உங்களால் என் கதையை முடித்து விட முடியும் என்று நினைத்தீர்களா?,அது எப்போதும் முடியாது என்று மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.

மேற்கு வங்க புயல் பாதிப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை முதல்வர் மம்தா பானர்ஜி காத்திருக்க வைத்துவிட்டதாக சர்ச்சை எழுந்தது. தாமதமாக வந்ததுடன் மம்தா பானர்ஜி பிரதமரை மட்டும் தனியாக சந்தித்து விட்டு 15 நிமிடத்தில் புறப்பட்டு சென்றார். அடுத்த சில மணி நேரத்தில் அம்மாநில தலைமை செயலாளர் ஆலாபன் பந்தோபாத்யாவை மத்திய அரசு டெல்லிக்கு திரும்ப அழைத்தது.

இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் இந்த உத்தரவை முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கவில்லை.

இதனை திரும்பப் பெற கோரி மத்திய அரசுக்கு அவர் கடிதம் அனுப்பினார். மேற்கு வங்க தலைமைச் செயலாளரை மத்திய பணிக்கு மாற்றிய ஒன்றிய அரசுக்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார்.

இதனையடுத்து,ஆலாபன் பந்தோபத்யாய பணியில் இருந்து ஒய்வு பெறுவதாக தெரிவித்ததையடுத்து,அவரை புதிய பொறுப்பில் முதல்வர் மம்தா பானர்ஜி நியமித்துள்ளார்.அதாவது,ஆலாபன் பந்தோபத்யாயயை முதல்வரின் சிறப்பு ஆலோசகராக நியமித்து மம்தா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு,மத்திய அரசுக்கும்,மேற்கு வங்க முதல்வருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வரும் இந்த நிலையில்,முதல்வர் மம்தா பானர்ஜி,பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார்.

அதாவது, செய்தியாளர்கள் சந்திப்பில் மம்தா பானர்ஜி பேசியதாவது,”மிஸ்டர் பிஸி பிரதமரே,மிஸ்டர் மன்கிபாத் பிரதமரே,உங்களுக்கு என்ன வேண்டும்?,நீங்கள் என் கதையை முடித்து விட முடியும் என்று நினைத்தீர்களா?,அது எப்போதும் நடக்காது. ஏனெனில், எனக்கு மக்கள் ஆதரவு உண்டு.அதனால்,நீங்கள் நினைப்பது ஒருபோதும் நடக்காது”,என்று தெரிவித்தார்.