நாட்டில் 50% -க்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் – மத்திய அமைச்சர் மாண்டவியா!

Federal Health Minister Mansuk Mandavia said it was a matter of pride that more than 50% of the people in the country have been vaccinated.

நாட்டில் 50% -க்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளது பெருமைக்குரியது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரத்தை குறைக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஓமைக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியாவில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாட்டில் தற்போது 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாம் வெற்றி பெறுவோம். வாழ்த்துக்கள் இந்தியா, தகுதியான மக்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இது மிகவும் பெருமைக்குரிய தருணம். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஒன்றாக வெல்வோம் என குறிப்பிட்டுள்ளார்.