வட தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை..!

The coastal districts of North Tamil Nadu, Tenkasi, Tirunelveli, Thoothukudi and Kanyakumari will receive light to moderate rainfall.

வட தமிழக கடலோர மாவட்டங்கள், தென்காசி , திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்கள், தென்காசி , திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவித்துள்ளது.

நாளை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால்  பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

unknown node