மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் தாயார் சுலோசனா சுப்ரமணியம் (90) அவர்கள் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில் அவர் நேற்று காலமானார்.
இந்த தகவலை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் அதில் வெளியிட்டு இருந்தார். தனது தாயின் நோய் காலத்தில் உதவி செய்த அனைவருக்கும் நன்றியும் கூறியிருந்தார். சுலோசனா மறைவுக்கு மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு, பா.ஜனதா தலைவர் ராம் மாதவ், நிதி ஆயோக் தலைவர் அமிதாப் கந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இவரது கணவர் திருச்சியை சேர்ந்த சுப்ரமணியம் ஆவார். இவர் இந்திய அணுசக்தி கோட்பாட்டின் தந்தை என அழைக்கப்படுகிறார், இவர் கடந்த 2011-ம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node