மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் தாயார் சுலோசனா சுப்ரமணியம் (90) அவர்கள் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில் அவர் நேற்று காலமானார். இந்த தகவலை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் அதில் வெளியிட்டு இருந்தார். தனது தாயின் நோய் காலத்தில் உதவி செய்த அனைவருக்கும் நன்றியும் கூறியிருந்தார். சுலோசனா மறைவுக்கு மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு, பா.ஜனதா தலைவர் ராம் மாதவ், நிதி […]
கொரோன வைரஸ் தாக்குதல் பலி எண்ணிக்கை உயர்வு. அச்சத்தில் ஆழ்ந்த அகில உலகமும். நம் அண்டை நாடான சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலால் 440 பேருக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் எனப்படும் புதிய வைரஸ் காய்ச்சல் கடந்த சில நாட்களாக பரவி அந்நாட்டையே அச்சுருத்தி வருகிறது. இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும். இந்நிலையில், பலி எண்ணிக்கை […]
உலகம் எங்கும் பொதுவுடமை ஆட்சியை விரிவடைய காரணமான ரஸ்யாவின் லெனின் மறைந்த தினம் இன்று. இன்றைய நாளில் இவரை நினைவு கூறுவோம். ரஸ்யா பொதுவுடைமை தலைவர், விளாடிமிர் லெனின் ஏப்ரல் மாதம் 22ம் தேதி, 1870ம் ஆண்டு, ரஷ்யாவில் உள்ள வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் பிறந்தார். அவரது பெற்றோர் இல்யா உல்யனாவ் மற்றும் மாயா உல்யானவ் ஆவர். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலீச் உல்யானவ் என்பதாகும். இவருக்கு அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற […]
உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பு.ரா கோகுலகிருஷ்ணன் இன்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது இறுதி சடங்கு நாளை காலை நடைபெரும் என தகவல். இவர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.30 மணியளவில் காலமானார். இவர் தமிழ்நாடு உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார், பிறகு குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணிபுரிந்தார். இவர் குஜராத் தலைமை நீதிபதியாக இருந்தபோது […]