கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன் சட்டப்பேரவையில் முகஸ்துதி செய்யாதீர்கள் என அமைச்சர் துரைமுருகன் எம்எல்ஏக்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.
தமிழக சட்டப்பேரவையில், பொதுவாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் பேச ஆரம்பிக்கையில், தங்கள் தலைவர்களை பற்றி 2 ,3 வரிகள் பெருமையாக பாராட்டி பேசிவிட்டு தான் அதன் பிறகு தொகுதி பிரச்சனை பற்றி பேச ஆரம்பிக்கின்றனர். இதனை பல முறை வேண்டாம் என தலைவர்கள் மறுத்துள்ளனர். ஏன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட கடந்த சட்டமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் முகஸ்துதி செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
சட்டமன்றத்தில் முகஸ்துதி :
unknown nodeஇந்த முகஸ்துதி விவகாரத்தை குறிப்பிட்டு அமைச்சர் துரைமுருகன் நேற்று சட்டப்பேரவையில் ஓர் முக்கிய வேண்டுகோளை வைத்தார். அவர் பேசுகையில், நாம் நமது தொகுதியின் லட்சக்கணக்கான மக்களின் பிரதிநிதியாக இங்கே வந்துள்ளோம். அந்த பொறுப்பை நாம் சரிவர செய்ய வேண்டும் . இங்கு உள்ள ஒரே ஒரு குறை,முகஸ்துதி. அந்த குறையானது தமிழக முதல்வருக்கும் இருக்கும் என தெரியும். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சட்டமன்ற தொகுதியின் பிரச்சனை பற்றி பேசுகையில் யாரையும் வர்ணை செய்து பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
அண்ணாவின் நினைவுகள் :
unknown nodeஇதனை குறிப்பிட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் வருத்தப்பட மாட்டீர்கள் என்று நினைக்கிறன். உங்களுக்கு உங்கள் தொகுதி குறைகளை, வேண்டுகோளை கூற உங்களுக்கு அளிக்கப்படும் நேரத்தில் பாதிநேரம் வர்ணையில் சென்றுவிடுகிறது என்று கூறிய அமைச்சர் துரைமுருகன், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவை பகிர்ந்தார். அவர் கூறுகையில், சிதம்பரத்தில் ஓர் மாநாடு, அங்கு ஆலடி அருணா பேசுகையில் அண்ணாவை புகழ்ந்து பேசுகிறார். உடனே, அண்ணா அழைத்து கண்டித்தார். என்னை பற்றி பேசுவதை விடுத்து என்ன பேச வேண்டுமோ அதனை பற்றி பேசு என கூறினார். அதன் பின்னர் பேசிய அருணா, அண்ணாவின் கைதட்டகளையும் பாராட்டையும் பெற்றார். இவளோ விஷயத்தை வைத்து கொண்டு தான் என்னை புகழ்ந்து பேசுனியா என கேட்டுக்கொண்டார். என அண்ணா நினைவை பகிர்ந்த்து கொண்டார்.
சட்டமன்ற கண்ணியம் :
unknown nodeமேலும் பேசுகையில், முகஸ்துதிக்கு யார் மயங்குகிறானோ அவன் விளங்க மாட்டான். உங்களுக்கு எல்லாம் எவன் எழுதி கொடுக்கிறானு தெரியல. இந்த மன்றத்திற்கு மரியாதை உண்டு . கண்ணியத்துடன் சொல்கிறேன். எம்.எல்ஏக்கள் உங்கள் தலைவரை புகழ்ந்து பேச வேண்டாம். அது சட்டமன்றத்துக்கு அழகல்ல என முகஸ்துதி பற்றி அமைச்சர் துரைமுருகன் தனது வேண்டுகோளை வைத்தார். இதில், ‘விளங்கமாட்டான்’ எனும் வார்த்தை மட்டும் அவை அடக்கத்திற்கு உகந்தது அல்ல என்று கூறி சபாநாயகர் அப்பாவு அதனை அவைகுறிப்பில் இருந்து நீக்கிவிட்டார். இதனை வழக்கம்போல சிரித்த முகத்தோடு ஏற்றுக்கொண்டார் அமைச்சர் துரைமுருகன்.