50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்.! அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்.! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்.! 

பொதுத்தேர்வில் சுமார் 40ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாததை குறிப்பிட்டு சட்டப்பேரவையில் எழுப்பபட்ட கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் கூறினார்.

பொதுத்தேர்வில் சுமார் 40ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாததை குறிப்பிட்டு சட்டப்பேரவையில் எழுப்பபட்ட கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் கூறினார்.

இன்று தமிழக சட்டப்பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான செங்கோட்டையன் பேசுகையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதவில்லை என்றும், 3 நாள் பள்ளி வந்தாலே தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறுவது பற்றியும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

40 ஆயிரம் கோடிரூபாய் :

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், கடந்த ஆண்டு 40 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவில்லை. 75 சதவீதம் பள்ளிக்கு வரவேண்டும் என்பதே விதி. எப்போதும் இல்லாத அளவுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்

கொரோனா ஊரடங்கு :

மேலும், 2020 ஊரடங்க்கிற்கு பிறகு எல்லா துறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2020- 2021 கல்வியாண்டில் ஊரடங்கு காரணமாக அனைவரும் தேர்ச்சி என்ற அடிப்படையில் வந்த மாணவர்கள் தான் தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு :

2021-2022 ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவர்களில், 41 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. 83ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வைக்க வைக்கப்பட்டு, 1.20 லட்சம் இடைநிற்றல் மாணவர்களில் 78 ஆயிரம் பேர் மீண்டும் தேர்வு எழுதியுள்ளனர் என குறிப்பிட்டார்.

நான் முதல்வன் திட்டம் :

நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவர்களை பெரிய நிறுவனங்களுக்கு கூட்டி சென்று அவர்களை ஆர்வப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் மாணவர்களிடம் படிக்கும் ஆர்வத்தை தூண்டி வருகிறது தமிழக அரசு என கூறினார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

75 சதவீதம் வருகைப்பதிவேடு :

வரும் கல்வியான்றில் 75 சதவீதத்திற்கும் குறையாமல் இருந்தால் மட்டுமே பொது தேர்வு எழுத முடியும். தேர்ச்சி பெறாத மாணவர்களை  துணை தேர்வு எழுத வைக்கவும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்கள் கல்விக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.