தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்...!

தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்.

தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 10,000 தடுப்பூசி முகாம்கள் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் மட்டும் 1,600 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மூன்றரை இலட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி சென்னையில் 400 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.