மணிப்பூர் வன்முறை: முதல் நாளிலேயே முடங்கிய நாடாளுமன்றம்!

மணிப்பூர் வன்முறை விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் கடும் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ParliamentMonsoonSession

மணிப்பூர் வன்முறை விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் கடும் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல்வேறு பரபரப்பான சூழல்களுக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. தொடங்கிய சில மணி நேரங்களிலேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. அதாவது, மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரையும், மக்களவை பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், 12 மணி தொடங்கிய மாநிலங்களவை நாள் முழுவதும் மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க வேண்டும், பிரதமர் இரு அவைக்கும் வந்து விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது, இரு அவைகளும் 2 மணிக்கு தொடங்கிய நிலையில், மணிப்பூர் கொடூர சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் காரணமாக, இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் விவகாரம் அமைச்சர் பிரகலாத் ஜோஷி விளக்கம்:

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம், மணிப்பூர் ஒரு முக்கியமான பிரச்சினை. விவாதத்திற்கு உள்துறை அமைச்சர் விரிவாகப் பதிலளிப்பார், அதற்கான விவாத தேதியை சபாநாயகர் முடிவு செய்யட்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.