மாண்டஸ் புயல் – தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் : டாக்.ராமதாஸ்

மின் இணைப்பும் அதிகமாக துண்டிக்கப்படவில்லை. அதற்காக பாராட்டுகள் என ராமதாஸ் ட்வீட்.

மின் இணைப்பும் அதிகமாக துண்டிக்கப்படவில்லை. அதற்காக பாராட்டுகள் என ராமதாஸ் ட்வீட்.

நேற்று மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், புயலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்.ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்ட மாண்டஸ் புயல் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தாமல் கரையை கடந்து சென்றிருக்கிறது. பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததால் பெரும்பான்மையான மக்கள் அச்சத்திலிருந்து விடுபட்டு நிம்மதி அடைந்துள்ளனர்!

புயலை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்படுகின்றன. மின் இணைப்பும் அதிகமாக துண்டிக்கப்படவில்லை. அதற்காக பாராட்டுகள்!’ என பதிவிட்டுள்ளார்.

unknown node