கட்டாய முகக்கவசம்.. அபராதம் என்கிற மனநிலைக்கு மக்கள் செல்ல கூடாது.! அமைச்சர் மா.சுப்ரமணியன் கருத்து.!

கட்டாய முகக்கவசம். அணியவில்லை என்றால் அபராதம் என்கிற மனநிலைக்கு மக்கள் செல்ல கூடாது. என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

கட்டாய முகக்கவசம். அணியவில்லை என்றால் அபராதம் என்கிற மனநிலைக்கு மக்கள் செல்ல கூடாது. என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியவில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு என்பது சற்று அதிகரித்து வர தொடங்கியுள்ளதால், மத்திய , மாநில அரசுகள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றன.

அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பு :

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்தும் , அதற்காக தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்தும் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பானது 3000ஐ தூண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.

கொரோனா பாதிப்பு :

அதில், கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 700 பேருக்கு புதிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், அதற்கும் முன்னர் கொரோனா பாதிப்பானது 300 ஆக மட்டுமே இருந்துள்ளது என குறிப்பிட்டார் . அதே போல, தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பானது 198 என்ற அளவில் பதிவாகியுள்ளது என்றும், அது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓரிலக்கத்தில் தான் இருந்தது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பெருமளவு பாதிப்பு இல்லை :

தற்போது, புதிய வகை ஓமிக்கிரான் வைரஸ் தொற்றானது முன்னர் போல பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தாது. இருந்தும் மக்கள் தங்களை தற்காத்து கொள்ள அறிவுறுத்தபடுகின்றனர். என்று குறிப்பிட்டார்.

முகக்கவசம் கட்டாயம் :

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள சுமார் 11 ஆயிரம் அரசு மருத்துவமனைகளில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா தொற்றானது மருத்துவமனைகளில் தான் இந்த வேகமாக பரவும் தன்மை கொண்டது. என குறிப்பிட்டார்.

கட்டாயமில்லை :

முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி என்பது என்றும் நிறுத்தப்படவில்லை. அது தற்போதும் நடைமுறையில் தான் இருக்கிறது. மக்கள் தங்கள் பாதுகாப்பு அவசியம் கருதி எப்போது வேண்டுமானாலும் முகக்கவசம் அணிந்து கொள்ளலாம். அபராதம் விதித்து, காட்டாயமாக்கப்பட்ட பின்னர் தான் மாஸ்க் அணிய வேண்டும் என்றில்லை. நம்மை நாம் பாதுகாத்து கொள்ள முகக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனை செய்தால் போதும் :

இறுதியாக, மிக வேகமாக பரவும் நிலையில் புதிய வகை கொரோனா தொற்று இல்லை. தீவிர சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லை. ஆக்சிஜன் சிலிண்டர் தேவையில்லை. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள் அறிவுறுத்தலோடு தங்களை தனிமைப்படுத்தி கொண்டாலே போதும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் குறிப்பிட்டார்.