Security Breach: கர்நாடகாவில் பிரதமர் மோடியின் கான்வாய் நோக்கி ஓட முயன்ற நபர் கைது !

கர்நாடக மாநிலம் தேவனகெரேயில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோவின் போது ஏற்பட்ட  பாதுகாப்புக் குளறுபடியால் பலத்த பாதுகாப்பை மீறி இளைஞர் ஒருவர் கான்வாய்

கர்நாடக மாநிலம் தேவனகெரேயில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோவின் போது ஏற்பட்ட  பாதுகாப்புக் குளறுபடியால் பலத்த பாதுகாப்பை மீறி இளைஞர் ஒருவர் கான்வாய்  வாகனத்தை நோக்கி ஓட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஒயிட்ஃபீல்ட் – கிருஷ்ணராஜபுரம் இடையிலான மெட்ரோ சேவையை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அந்நிகழ்வின் ஒருபகுதியாக பிரதமர் நரேந்திர மோடியின் ரோட்ஷோவின் போது பாதுகாப்பு மீறல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.அவரது கான்வாய் நோக்கி இளைஞர் ஒருவர்  ஓட முயன்றதாக ANI செய்தி நிறுவனம் வீடியோ வெளியிட்டுள்ளது.

unknown node

பகிரப்பட்ட வீடியோவில், இளைஞர்கள் காவல்துறையினரால் சரியான நேரத்தில் தடுக்கப்படுகிறார்.தகவலின்படி,அதன்  பின்னர் அந்த நபர் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டாவது முறை:

பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோவின் போது பெரும் பாதுகாப்புக் குளறுபடி ஏற்பட்டுள்ளது இது இரண்டாவது முறையாகும்.

unknown node

இதற்கு முன்னர் ஜனவரி 12 கர்நாடக மாநிலம் ஹுப்பாலியில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோவின் போது இளைஞர் ஒருவர் பிரதமரின் கான்வாய் நோக்கி மாலையுடன் ஓடுவதையும் சரியான நேரத்தில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழுவால் (SPG) தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கனவு காண்கிறது:

கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவின் மாநிலம் தழுவிய ‘விஜய் சங்கல்ப யாத்திரை’யின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர், காங்கிரஸ் எனக்கு குழி தோண்டுவது போல் கனவு கண்டு கொண்டிருக்கிறது.

மக்களை காங்கிரஸ் கட்சி ஏமாற்றி வருகிறது. கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சி நிலையான பாஜக அரசு தேவை.சந்தர்ப்பவாத, சுயநல அரசுகள் நீண்ட காலமாக இருந்தது கர்நாடக மாநிலத்தை பாதித்துள்ளது. கர்நாடகாவில் மீண்டும் இரட்டை எஞ்சின்  கொண்ட பாஜக அரசை அமர்த்த மக்கள் முடிவு செய்துள்ளனர் என்று கூறினார்.

Security Breach: கர்நாடகாவில் பிரதமர் மோடியின் கான்வாய் நோக்கி ஓட முயன்ற நபர் கைது !