தூய்மைப்பணியாளர்களுக்கு முக்கிய திட்டம், ஸ்மார்ட் மீட்டர்கள்; பட்ஜெட் அறிவிப்பு.!

தமிழக பட்ஜெட் 2023-24க்கான உரையில், தூய்மைப்பணியாளர்களுக்கு முக்கிய திட்டத்தினை நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் 2023-24க்கான உரையில், தூய்மைப்பணியாளர்களுக்கு முக்கிய திட்டத்தினை நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று தொடங்கிய தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான மின்னணு வடிவ பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தனது பட்ஜெட் உரையில், தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டத்தினை அறிவித்துள்ளார்.

இதன்படி பாதாளச்சாக்கடை சுத்தம் செய்யும் பணியாளர்களின் உயிரிழப்பை தடுக்கும் வகையில் அவர்களுக்கு தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், அவர்களை தொழில் முனைவோராக மாற்றி நவீன எந்திரங்கள் வாங்குவதற்கான மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தப்படும் என்றும் இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.