கடும் அமளியால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20- ஆம் தேதி தொடங்கியது. கடந்த 10 நாட்கள் நடைபெற்ற கூட்ட தொடரில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மணிப்பூர் சம்பவம்

Lok Sabha

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20- ஆம் தேதி தொடங்கியது. கடந்த 10 நாட்கள் நடைபெற்ற கூட்ட தொடரில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மணிப்பூர் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளிலும் நாள் முழுவதும் முடங்கி வருகிறது.

இதனைதொடர்ந்து, பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி அவையில் விளக்கம் அளிக்காததை கண்டித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, 11 வது நாளான இன்று மக்களவை தொடங்கிய சில மணி நேரத்திலேயே மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை இன்று பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.