கடும் அமளியால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு!

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்கக் கோரி, எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு.

Lok Sabha

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்கக் கோரி, எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இன்றைய அலுவல்கள் தொடங்கின. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அவையில் விளக்கம் அளிக்காததை கண்டித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தொடங்கிய சில நிமிடங்களில் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2023 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடநக்கிய நாளில் இருந்தே, மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் முடங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடும் அமளியால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு!