உள்ளாட்சி தேர்தல் நமது கட்சிக்கு மிக முக்கியம் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை!!

DMDK leader Vijayakanth issues statement to party volunteers to be ready to face local elections.

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று கட்சி தொண்டர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியீடு.

இதுகுறித்து தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு தேமுதிகவை சேர்ந்த அனைவரும் தயாராக இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் தேதி இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்ள தொண்டர்கள் ஆயுதமாக இருக்க வேண்டும். மேலும் எந்த இடங்களிலும் தொண்டர்கள் போட்டியிட தயாராக இருக்க வேண்டும்.

வரப்போகும் உள்ளாட்சி தேர்தல் தேமுதிகவுக்கு முக்கியமான தேர்தலாக அமையும். உள்ளாட்சி தேர்தலில் நமக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் அனைத்து இடங்களிலும் எவ்வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல் வேட்பாளர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தேர்தலுக்கான பணிகளில் கழக தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் என்பது நமது கட்சிக்கு மிக முக்கியமான தேர்தல் என்பதால் சரியான முறையில் தேர்தலை எதிர்கொள்ள கழக தொண்டர்கள் அனைவரும் ஆயுதமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

unknown node