தீமைகள் அகன்று நன்மைகள் பிறக்கட்டும் – ஓபிஎஸ், இபிஎஸ் தீபாவளி வாழ்த்து!

AIADMK coordinator OBS and co-coordinator EPS both wished the people a happy Diwali.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரும் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக மக்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரும் வாழ்த்து தெரிவித்த ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளனர்.

ஓபிஎஸ் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில்,தீப ஒளித்திருநாளில் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இன்று பெருகும் இன்பம் என்றும் நிலைக்கட்டும். தீமைகள் அகன்று நன்மைகள் பிறக்கும் இத்தீபாவளி திருநாளில் மக்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ எனதுநல்வாழ்த்துகள்என தெரிவித்துள்ளார்.

unknown node

இபிஎஸ் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில்,உலக நன்மைக்காக தீமையே உருவான நரகாசுரனை அழித்து மக்களை காத்த தீபாவளி திருநாளில், அனைவர் வாழ்விலும் இருள் நீங்கி ஒளி பிறக்கவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர் விடவும் எனது தீபாவளிநல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தீபாவளியை உற்சாகத்துடனும் பாதுகாப்புடனும் கொண்டாட வாழ்த்துக்கள்என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node