சட்டப்பேரவை அவை தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு மனுதாக்கல்...!

DMK MLA Appavu and DMK MLA Ku Pichandy have petitioned Secretary Srinivasan to contest for the post of Speaker and Deputy Speaker respectively.

தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட திமுக எம்.எல்.ஏ அப்பாவு-வும், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட திமுக எம்.எல்.ஏ கு.பிச்சாண்டியும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில், முதல்வர், அவைமுன்னவர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள் மற்றும் அக்கரவரிசைப்படி எம்.எல்.ஏ-க்களுக்கும் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம், சபாநாயகர் பதவிக்கு போட்டியிட திமுக எம்.எல்.ஏ அப்பாவு-வும், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட திமுக எம்.எல்.ஏ கு.பிச்சாண்டியும் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர்.