பாஜகவில் இணைந்த தலைவர்கள் கட்சிக்கு திரும்புவார்கள் – அஜித் பவார்

Leaders who joined the BJP before elections will return to NCP in the next three-four months, deputy chief minister and NCP leader Ajit Pawar

தேர்தலுக்கு முன்னர் பாஜகவில் இணைந்த தலைவர்கள் அடுத்த மூன்று நான்கு மாதங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு திரும்புவார்கள் என்று மகாராஷ்டிரா  துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சட்டமன்றத் தேர்தலின் போது, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த தலைவர்கள் பாஜகவில் இணைந்தார்கள். கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் அவர்களின் திட்டங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் பாஜகவுக்குச் சென்றனர்.இருப்பினும், இப்போது இந்த தலைவர்கள் விரக்தியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அவர்கள் தங்கள் பகுதிக்கு எந்த திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. எனவே, அவர்கள் இப்போது தேசிவாத காங்கிரஸ் கட்சிக்கு  திரும்ப ஆர்வமாக உள்ளனர் என்று பவார் தெரிவித்துள்ளார்.

கிராம பஞ்சாயத்து தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறையில் இருப்பதால் ,யார் கட்சியில் சேருவார்கள் என்பது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று பவார் கூறியுள்ளார். “இப்போது எங்களுடன் சேர விரும்பும் சில தலைவர்கள் உள்ளனர்.ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறை முடிந்ததும் நாங்கள் அவர்களை சேர்த்துக்கொள்வோம்.  சில முக்கியமான தலைவர்கள் விரைவில் எங்களுடன் சேருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இணைந்த தலைவர்கள் கட்சிக்கு திரும்புவார்கள் – அஜித் பவார்