5 பேர் உயிரிழப்பு.! எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்.!

மூவரசம்பட்டில் 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்தார்.

மூவரசம்பட்டில் 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்தார்.

சென்னை, மூவரசம்பட்டில் உள்ள குளத்தில் பங்குனி உத்திர நாளை முன்னிட்டு நேற்று நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்வின் போது 5 இளைஞர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். கோவில் நிகழ்வின் போது நடந்த இந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

2 நிமிட மௌன அஞ்சலி :

5 பேர் உயிரிழந்தததுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலையும், 5 பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிவாரண தொகையையும் அறிவித்தார். இன்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவையில் உயிரிழந்த 5 இளைஞர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கவன ஈர்ப்பு தீர்மானம் :

அதனை தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை நிகழ்வின் போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி , 5 இளைஞர்கள் உயிரிழந்தது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

ரூ.10 லட்சம் நிவாரணம் :

இந்த தீர்மானத்தின் கீழ் , 5 பேரின் குடும்பத்துக்கு அறிவித்த 2 லட்ச ரூபாய் நிவாரண தொகை போதாது. அதனால், அவர்களுக்கு நிவாரண தொகையை 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என கோரி இருந்தார். மேலும் தமிழகத்தில் உள்ள கோவில் குளங்களை முறையாக தூர்வார வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தில் குறிப்பிட்டு இருந்தார்.