உள்துறை அமைச்சர் அமித் ஷாவை துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி நேற்று இரவு சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமித் ஷா – குருமூர்த்தி சந்திப்பு :
பாஜகவின் மூத்த தலைவராகவும் ,மத்திய அமைச்சராகவும் உள்ள அமித் ஷா நேற்று தமிழகத்திற்கு வருகை தந்தார்.நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தான் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார்.அந்த சமயத்தில்உள்துறை அமைச்சர் அமித் ஷாவை துக்ளக் பத்திரிகை ஆசிரியர்குருமூர்த்திநேற்று இரவு சந்தித்து 3 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார்.ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்து கூறிவந்த நிலையில்துக்ளக் பத்திரிகை ஆசிரியர்குருமூர்த்தி அண்மையில் சந்தித்துள்ளார்.
ரஜினியை குருமூர்த்தி சந்தித்தது ஏன் ?
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியுடன் துக்ளக் பத்திரிகை ஆசிரியர்குருமூர்த்திஆலோசனை கடந்த நவம்பர் 1-ஆம் தேதி சுமார் 2 மணி நேரமாக ஆலோசனை மேற்கொண்டார்.ரஜினியின் உடல்நலம், அரசியல் சூழல், அரசியல் செயல்திட்டம் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியது.இந்த ஆலோசனையில் அரசியல் கட்சி தொடங்குவதில் தயக்கம் காட்ட வேண்டாம் என்றும், அரசியலுக்கு வாருங்கள் என்றும் குருமூர்த்தி கூறியதாக தகவல்கள் வெளியாகியது.
அண்மையில் ரஜினி கூறியது என்ன ?
கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டார்.அதில்,என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் என ரஜினிகாந்த கூறினார்.
அப்படி என்ன அறிக்கைதான் வெளியானது ?
தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கலாம் என்று நினைத்திருந்தேன் ஆனால் அதற்குள் கொரோனா பிரச்னையால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது.மேலும் அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியதாகவும் அந்த அறிக்கையில் தகவல் இருந்தது. ஆகவே கடந்த சில தினங்களாக ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது.இதன் பின்னர் தான் ரஜினி தனது எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.