2018இல் குஷ்பூ காங்கிரஸில் இருந்த போது அவர் பிரதமர் மோடி பற்றி பதிவிட்ட கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
2019 நாடாளுமன்ற பிரச்சாரத்தில் கர்நாடகாவில் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்கையில், எல்லா திருடர்களின் பெயரிலும் மோடி இருக்கிறார், அது நிரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என இருக்கிறது.’ என்பனவாறு பேசினார்.
ராகுல்காந்தி தகுதி நீக்கம் :
இந்த பேச்சுக்கு எதிராக குஜராத் எம்எல்ஏ சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இந்த வழக்கில், மோடி எனும் சமூகத்தை தவறாக பேசினார் என கூறி ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. நீதிமன்ற தீர்ப்பு காரணமாக ராகுல்காந்தி, எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
குஷ்பூவின் பழைய டிவீட் :
இந்நிலையில், 2020இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக கட்சியில் இணைந்த குஷ்பூ, காங்கிரஸ் கட்சியில் இருந்த கால கட்டத்தில் அவர் பதிவிட்ட டிவீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
unknown nodeகாங்கிரஸ் எம்பி டிவீட் :
அதில், மோடி என்ற பெயரை ஊழல் என மாற்றிக்கொள்ளலாம். அது அப்படியே பொருத்தும், லலித் , நீரவ், நரேந்திர என குறிப்பிட்டு டிவீட் செய்து இருந்தார். இதனை மேற்கோள் காட்டி , காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி திக்விஜய சிங் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘உங்கள் கட்சியில் ஒருவரான மோடி, குஷ்பு மீதும் அவதூறு வழக்கு தொடர்வீர்களா?’ என்று பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார்.
unknown node