உறுதியேற்பில் பிழை ஏற்பட்டதால்,மீண்டும் பதவியேற்கிறார் கேரள எம்.எல்.ஏ...!

Kerala MLA Raja is set to accept the affidavit again due to a mistake in his commitment

கேரளாவில் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட எம்.எல்.ஏ, ஏ.ராஜா,உறுதியேற்பில் பிழை விடுத்ததால்,மீண்டும் உறுதி மொழி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 20-ஆம் தேதி கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்றது.பின்னர்,கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாநில சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது.அதில்,புதிய உறுப்பினர்கள் எம்.எல்.ஏ-வாக பதவி ஏற்றனர்.அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பி.டி.ஏ.ரகிம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து,கேரள மாநிலம் தேவிகுளம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற ஏ.ராஜா அவர்கள் சட்டமன்றத்தில் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில்,பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட எம்.எல்.ஏ, ஏ.ராஜா, உறுதியேற்பில்,”உளமாற அல்லது கடவுள் அறிய உறுதி ஏற்கிறேன்”, என்று கூற தவறியதால் மீண்டும் உறுதி மொழி ஏற்று,அதன்பின்னர் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.